காலையிலேயே அதிர்ச்சி... பேருந்து கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு... பலர் படுகாயம்!
இன்று காலையிலேயே அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக சுற்றுலா பயணிகள் சென்றுக் கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.கேரள மாநிலம் இடுக்கியில் கேஎஸ்ஆர்டிசி அரசு பேருந்தில் சுற்றுலா பயணிகள் தஞ்சாவூருக்கு சென்றுக் கொண்டிருந்த நிலையில் 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புல்லுப்பாறை அருகே இன்று ஜனவரி 6ம் தேதி காலை சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த கேஎஸ்ஆர்டிசி பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவேலிக்கரையில் இருந்து தஞ்சாவூருக்கு சுற்றுலா சென்றுக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. சுற்றுலா குழுவினர் தங்களது சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது பேருந்து விபத்துக்குள்ளானது.
சாலையின் வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பேருந்து 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தாக்கின் சரிவில் இருந்த மரங்களில் சிக்கிக் கொண்டது. பேருந்தில் 34 பயணிகளும் இரண்டு ஊழியர்களும் இருந்துள்ளனர். பேருந்தின் பிரேக் பழுதானதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பீருமேடு மற்றும் முண்டக்காயத்தில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை கேரளத்தில் இருந்து தஞ்சாவூருக்குப் புறப்பட்ட இந்த பேருந்து திரும்ப பயணிகளை இறக்கி விடுவதற்காக கேரளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!