பொங்கலுக்கு மேலும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 
ரயில்


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு சிறப்பு ரயில் உட்பட மேலும் 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  
கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து ஜனவரி 10ம் தேதி காலை 8.05 மணிக்கு சிறப்பு ரயில் (07319) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 10ம் தேதி பிற்பகல் 3.40 மணிக்கு சிறப்பு ரயில் (07320) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.50 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூருவை அடையும்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..


எஸ்எம்விடி பெங்களூருவில் இருந்து ஜனவரி 10ம் தேதி இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில் (06569) புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து ஜனவரி 11ம் தேதி பிற்பகல்  1 மணிக்கு சிறப்பு ரயில் (06570) புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூரை அடையும்.சபரிமலை மகரவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ஜனவரி 15ம் தேதி அதிகாலை 4.25 மணிக்கு சிறப்பு ரயில் (06058) புறப்பட்டு, அதேநாள் இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

பொங்கல்


மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 16ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சிறப்பு ரயில் (06059) புறப்பட்டு, மறுநாள் இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலை சென்றடையும்.எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து ஜனவரி 16ம் தேதி மாலை 6.15 மணிக்கு சிறப்பு ரயில் (06046) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 17ம் தேதி காலை 10.30 மணிக்கு சிறப்பு ரயில் (06047) புறப்பட்டு, அதேநாள் இரவு 11 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை அடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web