வெடி விபத்தில் 4 பெண்கள் பலி... அதிர்ச்சி வீடியோ!
மத்தியப்பிரதேசத்தின் மொரினா மாவட்டம் ரதோர் பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த கோர சம்பவத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.
#WATCH राठौर कॉलोनी में रात 12 बजे एक ब्लास्ट की सूचना मिली जिसमें 2 घर पूरी तरह क्षतिग्रस्त हो गए। 2 लोगों की मौत हुई है। 4-5 लोग घायल हुए हैं। बचाव अभियान चल रहा है। घटना के कारण का अभी पता नहीं चल पाया है: समीर सौरभ, एसपी मुरैना https://t.co/Mnmvr9l95o pic.twitter.com/G3HE7lnDib
— ANI_HindiNews (@AHindinews) November 26, 2024
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கி தோட்டாவுக்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்து வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம், அல்லது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!