அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு!

 
அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு!


தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கி இன்று வரை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இண்று மனிதவள மேலாண்மைத் துறையில் புதிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு!

அதில் தமிழகத்தில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த முதல் நிலை பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் தமிழ் மொழி பயின்றவர்கள் இவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு!


செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர் வருவாய் மாவட்டங்களில் ஊழல்தடுப்பு கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படும்.அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு 40 சதவீதமாக உயர்த்தப்படுவதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web