வளர்த்தவரைக் காப்பாற்ற உயிரை விட்ட 5 நாய்கள்! காப்பாற்ற ஓடிய மாணிக்கமும் பலியான சோகம்!

 
மாணிக்கம்

பிரியமாக வளர்த்தவரை மின்வேலியில் இருந்து காப்பாற்றுவதற்காக அடுத்தடுத்து, மின்வேலியில் சிக்கி, 5 வேட்டை நாய்கள் துடிதுடித்து உயிரிழந்தன. தான் ஆசையாசையாய் வளர்த்த நாய்கள் துடிதுடிப்பதைப் பார்த்த மாணிக்கமும், நாய்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, மின்சாரம் தாக்கி உயிரை இழந்தார். 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(35). கூலி தொழிலாளியான இவர் 5 வேட்டை நாய்களை வளர்த்து வந்தார். அந்த வேட்டை நாய்களுடன் அருகில் இருந்த காட்டு பகுதிக்குச் சென்று வேட்டையாடுவதிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இரவு நேரத்தில் மாணிக்கம், தன்னுடைய 5 வேட்டை நாய்களையும் அழைத்து கொண்டு அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யன கவுண்டன்பட்டி கிராமத்தில் இருக்கும் காட்டு பகுதிக்கு முயல் வேட்டைக்குச் சென்றுள்ளார். 

electric fence

அந்த இடத்தில் அய்யன கவுண்டன்பட்டியை சேர்ந்தவர்களின் தோட்டங்கள் இருக்கிறது. அசோக்குமார் என்பவர் தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் சம்பங்கி பூக்கள் பயிரிட்டு இருந்தார். சம்பங்கி பூக்கள் தோட்டத்தினுள் வன விலங்குகள் எதுவும் புகுந்து, தோட்டத்தைப் பாழாக்கி விடக் கூடாது என்பதற்காக சம்பங்கி பூக்கள் பயிரிடப்பட்டிருந்த இடத்தை சுற்றி மட்டும் தனியாக  மின்வேலி அமைத்து இருக்கிறார். சாதாரணமாக பார்த்தால் உடனடியாக தெரியாத வகையில் மின்வேலி மிகவும் மெல்லிய கம்பியை பயன்படுத்தி சிறிதாக அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த மின் வேலியை கண்ட நாய்கள், எஜமானரைக் காப்பாற்ற நினைத்து, மின்வேலியை மிதித்து ஒவ்வொன்றாக துடி துடித்து இறந்துள்ளன. கண்ணெதிரே ப்ரியமாக வளர்த்த நாய்கள் துடிதுடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, நாய்களைக் காப்பாற்ற மாணிக்கமும், மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Alanganallur-PS

மாணிக்கமும், அவரது வேட்டை நாய்களும் இறந்து கிடப்பதை காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் மாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தோட்டத்து உரிமையாளரான அசோக்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web