விமான பயணிகளே நோட் பண்ணிக்கோங்க... ஜனவரி 30 வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு !

இந்தியா முழுவதும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில், குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி, கூடுதல் பாதுகாப்பாக, 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஜனவரி 30ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
24, 25, 26 ஆகிய 3 நாட்கள் உச்சக்கட்ட பாதுகாப்பாக, 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகள் முதல் விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும், தீவிரமாக கண்காணித்து, பார்சல்கள் அனைத்தையும் பலகட்ட சோதனைக்கு பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதி அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலையம் பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!