பெரும் பரபரப்பு... வேங்கைவயலுக்குள் நுழைய முயற்சித்த 5 பேர் கைது!

முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோரின் செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டது. செல்ஃபோன்களில் இருந்து அழிக்கப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள் மீட்கப்பட்டு இச்சம்பவத்தில் அவர்களது தொடர்பு உறுதி செய்யப்பட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் வழக்கை சிபிஐக்கு மாற்ற பிற அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வேங்கைவயலுக்குள் நுழைய முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கைவயலுக்குள் பத்திரிகை ஊடகம் உட்பட வெளியாட்கள் நுழைய காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. வேங்கைவயலை சுற்றி 9 சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மீறி நுழைய முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மூவரும் உண்மையான குற்றவாளிகள் அல்ல எனக்கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வேங்கைவயல் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!