அதிர்ச்சி! 50,000,00 தமிழர்களின் ஆதார் விவரங்கள் லீக் ஆனது!

அதிர்ச்சி! 50,000,00 தமிழர்களின் ஆதார் விவரங்கள் லீக் ஆனது!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொது வினியோகம் நடைபெற்று வருகிறது . இதனால் பயனடையும் பயனர்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் ஹேக்கர்கள் மூலம் இணையத்தில் லீக் ஆகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 49,19,668 பேரின் ஆதார் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளதை சைபர் செக்யூரிட்டி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அதிர்ச்சி! 50,000,00 தமிழர்களின் ஆதார் விவரங்கள் லீக் ஆனது!

ஜூன் 28 ம் தேதி இந்த தகவல்கள் ஹேக்கர் இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது.மேலும் தனிநபர் அடையாளம் காணக்கூடிய தகவல் (பிஐஐ) மற்றும் குடிமக்களின் ஆதார் எண், பயனாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் தகவல்கள் உட்பட முக்கிய தகவல்கள் தரவு பகிர்வு தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிர்ச்சி! 50,000,00 தமிழர்களின் ஆதார் விவரங்கள் லீக் ஆனது!

Tnpds.gov.in இணைய தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது மற்றும் 1945விஎன் என்ற பெயரில் செல்லும் ஒரு சைபர் கிரிமினல் குழுவால் ஹேக் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. இதனையடுத்து 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் உள்ளதாக அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிர்ச்சி! 50,000,00 தமிழர்களின் ஆதார் விவரங்கள் லீக் ஆனது!

டெக்னிசாங்க்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இது குறித்து விடுத்த செய்திக்குறிப்பில் இந்த விதி மீறலின் ஆழம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஆதார் பதிவுகளை பகிரங்கமாக அம்பலப்படுத்துவதால் குடிமக்கள் மோசடிக்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web