கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 500 கன அடி தண்ணீர் திறப்பு!

 
கண்டலேறு அணை

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, ஆந்திரா-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், 3 டிஎம்சி சேதாரம் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.

மேட்டூர் அணை

கண்டலேறு அணையில் தெலுங்கு கங்கா ஒப்பந்தப்படி, 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம்.

இந்நிலையில் ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள், கடந்த ஜனவரி மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு திறக்காததால், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கடிதம் எழுதினர்.

கண்டலேறு அணை

இதனையடுத்து, தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, காலை 11.45 மணிக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், இந்த தண்ணீர் படிப்படியாக கூடுதலாக திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்ரல் மாதம் திறப்பதாக இருந்த கிருஷ்ணா தண்ணீர் மார்ச் மாதமே திறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web