55 கி.மீ. சூறாவளிக்காற்று... இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
இன்று அக்டோபர் 11ம் தேதி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதிக்குள் தொடங்கும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைக் காற்று வீசும் நிலையால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்யத்தன்மை அதிகம் என கூறப்பட்டுள்ளது.

இன்று (அக்.11) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யும் எனவும், கோவை மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை அக்.12ம் தேதி கோவை மலைப்பகுதி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இதனுடன் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வரை வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
