6 வயது சிறுமி பள்ளியில் மயங்கி சரிந்து பலி... கதறித் துடிக்கும் பெற்றோர்..!!
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளம் வயது மாரடைப்புகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலத்தில் பதனகுப்பே கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் லிங்கராஜு-ஸ்ருதி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுடைய மகள் தேஜஸ்வனி இந்த சிறுமிக்கு 6 வயது. இந்த சிறுமி ஒரு தனியார் பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமி நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றிருந்த நிலையில் திடீரென வகுப்பறையில் மயங்கி சரிந்து விழுந்துவிட்டார்.
ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுமி உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் அந்த சிறுமி மாரடைப்பால் உயர்ந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!