அதிர்ச்சி... 6,000 கிலோ உயர்ரக போதைபொருள் பறிமுதல்... கடலோர காவல்படையினர் அதிரடி!

 
கடற்படை
 


அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருகே 6,000 கிலோ மெத்தாம்பெட்டமைன் எனும் உயர்ரக போதைப்பொருளை ஏற்றிச் சென்ற கப்பலை இந்திய கடலோர காவல்படையினர் (ஐசிஜி) பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மியான்மரை சேர்ந்த 6 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்கள், சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை. ஒவ்வொன்றும் 2 கிலோ எடை கொண்ட தோராயமாக 3,000 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்தது.

 இலங்கை கடற்படை

இது குறித்து கருத்து தெரிவித்து ஒரு பாதுகாப்பு அதிகாரி, “கடலோரக் காவல்படை டோர்னியர் விமான பைலட் வழக்கமான ரோந்துப் பணியின் போது போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 150 கிமீ தொலைவில் அமைந்துள்ள பாரன் தீவுக்கு அருகே மீன்பிடி இழுவை படகு சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைக் கண்டபோது இந்த நடவடிக்கை தொடங்கியது என்றார்.

"விசைப்படகு எச்சரிக்கப்பட்டு அதன் வேகத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையில், பைலட் அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளைக்கு எச்சரிக்கை செய்தார். அருகிலுள்ள விரைவு ரோந்து கப்பல்கள் உடனடியாக பேரன் தீவுக்கு அனுப்பப்பட்டு, மேலதிக விசாரணைக்காக நேற்று போர்ட் பிளேயருக்கு அந்த இழுவைப்படகு இழுக்கப்பட்டது" என்றார்.

இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படை இடையே கடல்சார் கூட்டு பயிற்சி

"மீன்பிடி இழுவை படகில் இருந்து ஆறு மியான்மர் பிரஜைகளை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் மெத்தாம்பேட்டமைன் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு சப்ளை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. நாங்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் காவல்துறைக்கு கூட்டு விசாரணைக்கு தகவல் தெரிவித்துள்ளோம்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web