61 அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்கள்… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. அந்த வகையில், அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகிறது.

இந்த அறிவிப்பின் மூலம் 61 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பி.எல். பட்டம் பெற்றிருக்க வேண்டும். வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். குற்றவியல் நீதிமன்றங்களில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் அவசியம். வயது வரம்பு பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபடும்.

தேர்வு முறை தமிழ் தகுதித் தேர்வு, முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு என அமைந்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31, 2025. மேலும் விவரங்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
