இந்தியாவில் விரைவில் 6ஜி தொழில்நுட்பம்.. மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசுகையில், 4ஜி தொழில்நுட்பம் உலகுக்கு அறிமுகமானபோது இந்தியா உலகையே பின்தொடர்ந்து, 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டபோது உலகத்துடன் பயணித்தது. ஆனால் தொழில்நுட்ப புரட்சியால் cதொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலக முன்னோடியாக இருக்கும்.
1993 ஆம் ஆண்டு மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தியாவில் 6 நகரங்களில் மட்டுமே இது அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று இந்தியாவில் 117 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. இணைய இணைப்புகளைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகளுக்கு முன்பு 25 கோடி இணைப்புகள் இருந்தன. தற்போது அது 97 கோடியாக அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 6 கோடி பிராட்பேண்ட் இணைப்புகள் இருந்தன. தற்போது 94 கோடி இணைப்புகள் உள்ளன. பாரத்நெட் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 2 லட்சத்து 46 ஆயிரம் கிராமப்புறங்களுக்கு இணையதள இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புரட்சிகரமான திட்டத்தால் இந்தியா தொழில்நுட்பத்தின் மையமாக மாறும்.
என்ஐஆர்எஃப் தரவரிசையில் ஐஐடி சென்னை இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது என்று கூறிய அவர், புதுமைகள் உருவாகும்போது, அதை மனிதநேயமிக்கதாக மாற்றும் நிறுவனம் அதன் கருப்பையாக திகழும் என்று குறிப்பிட்டார். மாணவர்கள் தங்கள் கல்விக்குப் பிறகு தங்கள் வாழ்க்கையைத் தொடங்கும்போது அவர்கள் படித்த நிறுவனத்திற்கும், நாட்டிற்கும் திறம்பட பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 5ஜி தொழில்நுட்பத்தை மிக வேகமாக செயல்படுத்தும் நாடு இந்தியா என்று கூறிய அவர், 98 சதவீத தொழில்நுட்பம் நகர்ப்புறங்களில் பரவியுள்ளது என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!