இன்று ராஞ்சியில் 6 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடக்கம்!
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா ஸ்டேடியத்தில் 4வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று அக்டோபர் 24ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு மற்றும் மே மாதத்தில் நடைபெற திட்டமிடப்பட்ட இந்த போட்டி இருமுறை தள்ளிவைக்கப்பட்ட பின்னர் இப்போது நடைபெறுகிறது.

மொத்தம் 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த போட்டியில் 37 பந்தயங்கள் நடத்தப்பட உள்ளன. இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 6 நாடுகளுக்கு சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர். பாகிஸ்தான் இந்த ஆண்டில் போட்டியில் கலந்துகொள்ளவில்லை; போட்டி அமைப்பாளர்களின் அழைப்புக்கு பாகிஸ்தான் தரப்பில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

கடைசியாக 2008-ம் ஆண்டு கொச்சியில் நடைபெற்ற தெற்காசிய தடகள போட்டியில் இந்தியா 24 தங்கம் உட்பட 57 பதக்கங்களை வென்றது. இந்த முறை 73 பேர் கொண்ட இந்திய அணி களமிறங்கியுள்ளது. நடப்பு சீசன் முடிந்த நிலையில் நட்சத்திர வீரர்கள் இடம் பெறவில்லை; இதனால் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. 63 வீரர்களை கொண்ட இலங்கை அணி இந்தியாவுக்கு முக்கிய சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
