இன்று 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிப்பு!

 
இன்று 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிப்பு!


தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.ஆகஸ்ட் 13ல் தொடங்கப்பட்ட தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் 23 நாட்கள் நடத்தப்பட்டது.

இன்று 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிப்பு!

பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்த நிலையில் துறை சார்ந்த விவாதங்களுக்கு அந்தந்த அமைச்சா்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனா்.

அதில் குறிப்பாக நீட் தோவை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா, உள்பட 20 முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளன.

இன்று 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிப்பு!


மேலும் இன்று செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாள் தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேர் விடுதலை செய்யப்படுவர் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

From around the web