தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் 70,449 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை!

 
டிபிஐ பள்ளி கல்வித்துறை

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கும் நடைமுறை தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாநில அரசு ஏற்று வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு கல்வியாண்டும் நடைபெறும் சேர்க்கை நடவடிக்கை, இம்முறை மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தாமதமானதால் இடைநிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க மத்திய அரசு நிதி வழங்கியதைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை தாமதமாக இருந்த சேர்க்கை செயல்முறையைத் தொடங்கியது.

சிபிஎஸ்இ

இதற்கிடையில், ஏற்கனவே பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களையும் இத்திட்டத்தில் சேர்க்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு சில தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், பள்ளிக்கல்வித்துறை கட்டாய அறிவுறுத்தல் பிறப்பித்ததைத் தொடர்ந்து, சேர்க்கை நடைமுறை முன்னெடுக்கப்பட்டது.

நடப்பாண்டில் மொத்தம் 7,717 மழலையர், தொடக்க மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 70,449 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்காக 81,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. காலியாக இருந்த இடங்களுக்கு நேற்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாணவிகள் படிப்பு விடுமுறை தேர்வு சிபிஎஸ்இ

இதன் மூலம், 4,070 தொடக்கப்பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 28,077 பேரும், 4 பள்ளிகளில் 1ம் வகுப்பில் 5 பேரும், மேலும் 3,647 மெட்ரிக் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 42,273 பேரும், 21 பள்ளிகளில் 1ம் வகுப்பில் 99 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 70,449 மாணவர்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தெரிவித்தார்.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?