பகீர்... 719 அரசு ஊழியர்கள் போலிச் சான்றிதழ்கள் வழங்கல்... அரசு அதிரடி நடவடிக்கை!

 
ஃபேக்
 

மகாராஷ்டிரா அரசுத் திட்டங்களின் கீழ் பயன் பெற போலி ஊனச் சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக 719 அரசு ஊழியர்கள் மீது புகார்கள் வந்துள்ளதாக திவ்யாங் நலத்துறை அமைச்சர் அதுல் சேவ் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அரசுத் துறைகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊனச் சான்றிதழ்களை சரிபார்ப்பதை கட்டாயமாக்கியுள்ளதாக அமைச்சர் கூறினார். முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். போலி சான்றிதழ் அளித்தவர்கள் மற்றும் 40 சதவீதத்துக்கும் குறைவான குறைபாடு உள்ளவர்கள் மீது ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016ன் கீழ் ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

புனே மாவட்டத்தில் மட்டும் 21 அரசு ஊழியர்கள் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து துறைகளும் வரும் 2026 ஜனவரி 8க்குள் சான்றிதழ் சரிபார்ப்பை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முழு விவர அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!