அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கக் காத்திருக்கும் மழை!

 
school rain


 வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகலாம் என  இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு  8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோTwo Women walked in rain with umbrellaட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பெய்ய வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும்  பெங்கால் புயல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே 30ம் தேதி கரையை கடக்கும் என வானிலை  ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் நேற்று மாலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல உருவாகாமல் தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

rain
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web