கோர விபத்து... அரசுப்பேருந்து ஆட்டோ மீது மோதியதில் 8 பேர் உடல் நசுங்கி பலி... முதல்வர் ரூ5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

 
விபத்து

 ஆந்திர மாநிலத்தில்  புட்லூர் மண்டலம் எலுட்லா கிராமத்தில்   திம்மாம்பேட்டாவில் உள்ள வாழைத் தோட்டத்தில் ஓட்டுநர் உட்பட 13 பேர் தங்கள் சொந்த கிராமத்திலிருந்து விவசாய கூலி வேலைக்குச் சென்றனர்.  இவர்கள் அனைவரும் தோட்ட வேலைகளை முடித்துக் கொண்டு நேற்று மாலை ஆட்டோவில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.  அப்போது  திம்மாம்பேட்டையில் அனந்தபூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் இருந்து  ​​கார்லடின்னுக்குள் செல்வதற்காக ஆட்டோ  சாலையின்  இடதுபுறத்தில்  சர்வீஸ் ரோட்டில் சென்றது.  தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வருவதை கவனிக்காமல் ஆட்டோவை ஹைவே மீது செல்ல முயன்றனர். 

ஆம்புலன்ஸ்


அதே நேரத்தில் தர்மாவரத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற அரசு ஆர்டிசி பேருந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்ததால் நேருக்கு நேர் ஆட்டோ மீது மோதியது.  இதில் ஆட்டோவில் பயணம் செய்த பாலபெத்தையா (55), சின்ன நாகம்மா (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உடல் நசுங்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே பெத்தக்கா (68), ராமன்ஜினம்மா (35) உயிரிழந்தனர். 

சட்டப்பேரவைக்குள் நுழைய மாட்டேன்!! கதறும் சந்திரபாபு நாயுடு!!
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமுடு (48), சின்னகண்ணா (55), கொண்டம்மா (50), ஈஸ்வரய்யா (53) ஆகியோர் உயிரிழந்தனர்.  பெத்துலம்மா, கங்காதர், லட்சுமிதேவி, ராமாஞ்சினம்மா, ஆட்டோ டிரைவர் நீலகண்டேஸ்வரா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கலும்  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ5 லட்சம்  நிவாரணமும்  அறிவித்துள்லார். படுகாயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும்  உத்தரவிட்டுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web