19 வது மாடியில் தலைகீழாக தொங்கும் 82 வயது மூதாட்டி!! வைரலாகும் வீடியோ!!

 
19 வது மாடியில் தலைகீழாக தொங்கும் 82 வயது மூதாட்டி!! வைரலாகும் வீடியோ!!


கிழக்கு சீனாவில் அமைந்துள்ளது ஜியாங்கு மாகாணம். இங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 82 வயது முதிய பெண்மணி 19 வது மாடியில் வசித்து வந்தார். இவர் திடீரென எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட்டார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக 18வது மாடியில் இருக்கும் துணியை காயப்போடும் ரேக்கில் மாட்டி தலைகீழாக தொங்கினார். கால்கள் 18வது மாடியிலும், உடல் பகுதி 17வது மாடியிலும் இருந்தன.


உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவரை பாதுகாப்பாக மீட்டனர். இதில் பெண்மணிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web