ஸ்கூல் பீஸ் கட்டாததால் வகுப்பறையில் கீழே அமர வைத்து வைத்த அவலம்... 8 ம் வகுப்பு மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை!

குஜராத் மாநிலத்தில் சூரத்தில் செயல்பட்டு வருகிறது ஒரு தனியார் பள்ளி. இந்தப் பள்ளியில் படித்து வரும் 8ம் வகுப்பு மாணவி ஸ்கூல் பீஸ் கட்டவில்லை எனத் தெரிகிறது. ரூ15000 பீஸை இந்த மாணவியின் பெற்றோரால் கட்டமுடியவில்லை. இதற்காக இந்த மாணவியை மட்டும் பள்ளியில் ஆய்வகத்தில் அனைத்து மாணவர்களின் முன்னிலையிலும் தனியாக கீழே அமர வைத்து அவமானப் படுத்தினர்.
இதனால் அந்த மாணவி அவமானத்தில் கூனிக்குறுகி முகத்தை மூடிக்கொண்டு அழுதார். மன வேதனையிலும், மன அழுத்தத்திலும் மாணவி வீட்டிற்கு வந்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மாணவியின் தந்தை ”பள்ளியில் ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு கால அவகாசம் பள்ளியில் கேட்டிருந்த போதிலும் என் மகளை அவமானப்படுத்தி கொலை செய்து விட்டார்கள் ” என கதறி அழுகிறார். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!