அசாம் நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு... தொடரும் மீட்பு பணிகள்!

 
அசாம் நிலக்கரி சுரங்கம்

அசாம் மாநிலம் கலாமதி நகர் அருகே உம்ரங்சூ பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் ஒரு பகுதியில் நேற்று 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கத்துக்குள் தண்ணீர் புகுந்தது.


இந்த சுரங்கம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 300 அடி ஆழத்தில் சிக்கி இருந்த நிலையில், தற்போது மீட்கப்பட்ட தொழிலாளர்கள் போக, 9 தொழிலாளர்கள் இன்னும் சுரங்கத்திற்குள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அசாம் நிலக்கரி சுரங்கம்

தற்போது ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் தொடர்ந்து இறைக்கப்பட்டு வரப்படுகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்கள் சம்பவ பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web