கல்யாணம் செய்து கொண்டாலும் மகளுக்கு முழு உரிமை உண்டு! தந்தை விஷயத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
மெட்டி திருமணம்

திருமணம் செய்து கொண்டாலும், மகள் என்றைக்குமே தந்தைக்கு மகள் தான். மகளுக்கு முழு உரிமை உண்டு. எப்படி மகனுக்கு தந்தையிடத்தில் திருமணத்துக்குப் பின்பும் முழு உரிமை உண்டோ அதே போல், மகளுக்கும் முழு உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுவாக பெண்களுக்கு திருமணம் ஆனவுடன் அதுவரை இருந்த தந்தையின் இனிஷியலை மாற்றி கணவனின் இனிஷியலை சேர்த்துக் கொள்கின்றனர். திருமணம் ஆனாலும் ஒரு பெண் தனது தந்தையின் மகளாக தான் இருப்பாள் என்ற அதிரடி தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ராணுவத்தில் பணிபுரிந்தவர்களின் பிள்ளைகளுக்கு சலுகைகள், இடஒதுக்கீடு போன்ற வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ராணுவத்தில் பணிபுரிபவர்களின்  பிள்ளைகளுக்கு நாடு முழுவதும் கல்வி, மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த பிரியங்கா பட்டீல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள உதவிப்பேராசிரியர் பணிக்காக விண்ணப்பித்து இருந்தார்.

‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

அதில், முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்ற கோட்டாவின் அடிப்படையில் விண்ணப்பித்திருந்தார். இதற்கான அடையாள அட்டையை வழங்க ராணுவ வீரர்கள் நல வாரியத்தை அணுகினார்.  ஆனால் பிரியங்கா பட்டீலுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதால் அவர் கணவரை சார்ந்தவர். தந்தையை சார்ந்தவர் அல்ல என விளக்கம் கூறி அடையாள அட்டையை வழங்க, ராணுவ வீரர்கள் நல வாரியம் மறுத்து விட்டது. இது குறித்து பிரியங்கா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில்  "சுபேதரராக பணியாற்றிய ரமேஷ் கந்தப்பா போலீஸ் பாட்டில் எனது தந்தை. இவர் 2001ல் ஆபரேஷன் பராக்ரம்  திட்டத்தில்  கன்னி வெடிகளை அகற்றும் போது பணியில் இருந்த போதே உயிரிழந்தார்.  அப்போது  நான் 15 வயதில் பள்ளிப்படிப்பில் இருந்தேன். சிரமப்பட்டு படித்து கடந்த 2015ல் பட்டபடிப்பை முடித்துள்ளேன். தற்போது மாநில அரசு அறிவித்துள்ள உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்துள்ளேன். அதற்கான அனைத்து தகுதிகளும் இருந்தாலும்  திருமணமாகி விட்டதால் முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்பதற்கான அடையாள அட்டை வழங்க மறுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்து இருந்தார்.

கர்நாடகா

இந்த மனுவின் மீதான விசாரணையில்  ஒரு மகன் எப்படி திருமணமானாலும் தனது தந்தைக்கு மகனாகவே இருக்கிறாரோ, அதே போன்று தான் திருமணமானாலும் ஒரு பெண் தனது தந்தைக்கு மகளாகவே இருப்பாள். மகனை போன்றே மகளுக்கும்  திருமணம் என்பது அவரது நிலையை மாற்றாது.” என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி  25 வயதுக்குட்பட்ட திருமணமான மகள்கள், சார்பு அடையாள அட்டையை பெறுவதற்கு தகுதியானவர்கள். இதற்கான ராணுவத்தின் வழிகாட்டுதல்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.  அத்துடன் பிரியங்காவின் மற்ற தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த 2 வாரங்களுக்குள் மனுதாரர் பிரியங்கா பாட்டிலுக்கு சார்பு அடையாள அட்டையை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்கான விளக்க குறிப்பு ஒன்றையும் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதில் நமது சமுதாயத்தில் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரே மாதிரியான பாலின சித்தரிப்பை தற்போதும் அனுமதிக்க வேண்டாம்.  பெண்களின் சமத்துவத்திற்கு பெரும்  தடையாக இருக்கும்.  அத்துடன் பாலின-நடுநிலை பெயரிடலுடன் முன்னாள் ராணுவ வீரர்களின் அடையாளப்படுத்துவதற்கான பெயரை  பரிசீலிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web