வயிற்றுக்குள் சிக்கிய அடிபம்ப்!! வலியால் அலறித் துடித்த இளைஞர்!!

 
நாகராஜ்

இரு சக்கர வாகனத்தை ஓட்டும் போது பலரும் படு வேகமாக ஓட்டுகின்றனர். இப்படி ஓட்டுவதால் பல நேரங்களில் ஆபத்துக்களை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம் என்பதை உணர்வதில்லை. விபத்துக்கள் என்பது அடுத்தவர்களுக்காக மட்டுமல்ல நமக்கே சில நேரங்களில் பெரும் அசம்பாவிதங்களை விளைவித்து விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் ஆந்திரமாநிலத்தில் நடந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில்  பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரி பகுதியில் உள்ள இந்திரா காலனியில் வசித்து வருபவர்  நாகராஜ். இவர்  பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது  எதிர்பாராத விதமாக அவருடைய பைக் கட்டுப்பாட்டை இழந்து  சாலை ஓரத்தில் இருந்த அடி பம்பில்  மோதியது.வேகமாக மோதியதில்  அடிபம்பு கைப்பிடி வயிற்றை துளைத்து உள்ளே சென்று சிக்கிக் கொண்டது.

நாகராஜ்

வலி தாங்காமல்  அலறி துடித்துள்ளார். அவரது நிலையை பார்த்த பலரும் பரிதாபப்பட்டு உடனடியாக பலவிதமான யோசனைகளை தெரிவித்தனர். மெக்கானிக் ஒருவரின் உதவியுடன் கட்டரை கொண்டு வந்து மகன் வயிற்றில் சிக்கிகொண்டிருந்த அடிப்பம்பு கைப்பிடியை வெட்டி எடுத்தார். அதன் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

ஆம்புலன்ஸ்
 மருத்துவர்கள் காயமடைந்திருந்த நாகராஜுக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் சிக்கி கொண்டிருந்த கைப்பிடியின் துருப்பிடித்த பாகங்கள், உலர்ந்த பெயிண்ட் அனைத்தையும் அப்புறப்படுத்தினர். அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தபோது இந்த கொடூர விபத்து நிகழ்ந்திருப்பது அப்பகுதியில்  பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web