பகீர்!! மளமளவென சரிந்து விழுந்த மெட்ரோ மேம்பால தூண்!! தாயும், குழந்தையும் பலி!!

 
மெட்ரோ

 

 கர்நாடகாவில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பெங்களூருவின் முக்கிய சாலைகளில்  மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரயில் மேம்பாலத்துக்காக இரும்பு கம்பிகளால் தூண்கள் கட்டப்பட்டு வருகின்றன. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலத்துக்காக இரும்பு கம்பிகளால் ஆன தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன

மெட்ரோ

நேற்று காலை 11 மணி அளவில் திடீரென மெட்ரோ ரயில் பாதைக்காக அமைக்கப்பட்டு வரும் இரும்பு தூண் ஒன்று, பணியின் போது சாலையில்  சரிந்து விழுந்தது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக்கின் மீது விழுந்து  பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த பைக்கில் சென்ற கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் சென்ற நிலையில் அவர்கள் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.  அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதில் தாயும், அவரது 2 வயது மகனும் உயிரிழந்தனர்.

மெட்ரோ
இந்த திடீர் கோர விபத்தால்  குறிப்பிட்ட பகுதியில் கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடிபாடுகளை அகற்றும் பணி முடிவடைந்து மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  வழியில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் குழந்தை மீது மெட்ரோ ரயில் இரும்பு தூண் சரிந்து விழுந்தது  பெங்களூருவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web