பாஜக எம்.பி மீது பகீர் புகார்.. 3 நாட்களாக நீடித்து வந்த மல்யுத்த வீரர்கள் போராட்டம் வாபஸ் !!

 
gfh

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கால் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். லக்னோவில் நடக்கும் பயிற்சி முகாமில் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளிடம் அத்து மீறி நடக்கும் போக்கு சில ஆண்டுகளாக தொடருகிறது. எதிர்த்து கேட்டால் மிரட்டுகிறார்கள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், தீபக் பூனியா, ரவி தஹியா உள்ளிட்ட இந்திய முன்னணி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 3 நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பிரிஜ் பூஷன் ஷரண் சிங் பதவி விலக வேண்டும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்து விட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், பிரிஜ் பூஷனை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

protest

நேற்று முன்தினம் இரவு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை. நேற்றும் போராட்டக்காரர்களிடம் அனுராக் தாக்குர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தீர்க்கமான நடவடிக்கை தேவை என்பதில் உறுதியாக இருந்தனர்.

இதனிடையே இந்திய ஒலிம்பிக் சங்கம் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க 7 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமிப்பதாக உறுதியளித்தது. அந்த குழுவில் மேரிகோம், டோலா பேனர்ஜி, அலக்நந்தா அசோக், யோகேஷ்வர் டுட் மற்றும் சஹ்தேவ் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. 

protest

இதனையடுத்து போராட்டத்தினை வாபஸ் பெற்றனர். மல்யுத்த வீரர் பஜ்ராங் புனியா மேலும் கூறியதாவது, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் எங்கள் கோரிக்கையை ஏற்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். அவருக்கு எங்களது நன்றியினை தெரிவிக்கிறோம். இதையடுத்து எங்களது போராட்டத்தினை வாபஸ் கொள்கிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

From around the web