பகீர்... டார்ச் லைட்டை சொருகி மனைவியைக் கொன்ற கணவன்! போதையில் வெறிச்செயல்!

 
வனராஜ்

தமிழகம் போதையில் தள்ளாடுகிறது. ஆமாம்.. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு.. அதாவது மாறி மாறி இரு திராவிட கழக அரசுகளும் ஆட்சி செய்து வந்த நிலையில், இம்முறை தமிழகம் அதிகமாகவே போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பேருந்துகளில் மாணவிகள் கைகளில் பீர் பாட்டில்களுடன் இருக்கிறார்கள். வகுப்பறையில் மாணவர்கள் மது அருந்துகிறார்கள். டாஸ்மாக் வாசலில் பெண்கள் போதையில் நடுரோட்டில் உருள்கிறார்கள்.

இது எல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாக தானே? என்று கேள்வி எழுப்புபவர்கள் இந்த காட்சிகளை கடந்த ஆறேழு வருடங்களுக்கு முன்பாக கேள்விபட்டு இருப்பீர்களா? அதாவது யார் நல்ல முதல்வர்? என்கிற கேள்விக்குள் செல்ல வேண்டாம்.. ஆனால், இத்தனை குற்ற செயல்களை முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவோ, கலைஞரோ இப்படி அனுமதிப்பார்களா? காவல் துறை இத்தனை குற்ற செயல்களை  வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்குமா?

கணவனும், மனைவியும் மது அருந்தி விட்டு, போதை தலைக்கேறியதும், டார்ச் லைட்டை மனைவியின் பிறப்புறுப்பில் சொருகி கொலைச் செய்திருக்கிறான் கணவன். நடுரோட்டில் கொல்வது, காதலிக்க மறுத்தால் கொல்வது என்று குற்ற செயல்களும் அதிகரித்து வருகிறது. விருதுநகர் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அத்திகோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வனம் என்கிற வனராஜ் (50). இவர் ஏசுராணி என்கிற உமாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். ஏசுராணிக்கு வனராஜ் 2வது கணவர் ஆவார். இவர்கள் இருவரும் முதல் திருமணத்தின்போது பிறந்த 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளனர். வனராஜ் கான்சாபுரம் அத்திகோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து காவல் வேலை செய்து வந்துள்ளார்.

vaginal

இரவு மோட்டார் அறையின் மாடியில் வனராஜ் மற்றும் அவரது மனைவியும் இருவரும் தங்கியுள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது ஏசுராணி உடலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து வனராஜ் கூமாபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர்  ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர்  இந்த சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்த செய்த கூமாப்பட்டி போலீசார் இறந்த உமாவின் கணவர் வனராஜிடம்  விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

Koomapatty-PS

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், “இரவு தங்கியிருந்த இடத்தில் நானும் எனது மனைவியும் மது அருந்தி விட்டு உறவு கொண்டோம். அப்போது, என்னால் உறவு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எனது கையில் இருந்த டார்ச் லைட்டை வைத்து எனது மனைவியின் மர்ம உறுப்பில் அழுத்தினேன். இதனால் ரத்தம் வெளியேறி எனது மனைவி இறந்து விட்டார்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை கேட்டு அதிச்சியடைந்த போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து வனராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க!

From around the web