வைகைப்புயல் வடிவேலுவின் தாய் மறைவிற்கு முதல்வர் இரங்கல்!!

 
வடிவேலு தாய்

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்ற பாப்பு.  இவருக்கு வயது 87. இவர் வயது மூப்பு மற்றும்  உடல்நலக்குறைவால் காலமானார்.தாயார் இறப்பு குறித்து நடிகர் வடிவேலு விடுத்த செய்திக்குறிப்பில் கடந்த சில நாட்களாக தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், உடல்நிலை குறைவு காரணமாக நேற்று திடீரென காலமானதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை

நடிகர் வடிவேலுவின் தாய் மறைவிற்கு, சினிமா பிரபலங்கள், அவரது ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார். அத்துடன் இரங்கல் செய்தியையும் வெளியிட்டுள்ளார்.அ தில்  நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் (எ) பாப்பா மதுரை விரகனூரில் இயற்கை எய்தினார்  என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். அவரது இழப்பால் வாடும் 'வைகைப் புயல்' நடிகர் வடிவேலு அவர்களுக்கும் , குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து வரும் நடிகர் வடிவேலு மதுரையில் பிறந்ததால், இவருக்கு வைகைப்புயல் என ரசிகர்கள் பட்டம் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் 1988 ல் வெளியான  ”என் தங்கை கல்யாணி ” யில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் முதலில் அறிமுகமானார். தொடர்ந்து   என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், அரண்மனை கிளி  படங்களில் இவரது தனிப்பாணி நகைச்சுவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.தமிழ் சினிமாவில் இவரது நகைச்சுவை திறமைக்கு தீனி போடும் வகையில் அடுத்தடுத்து படவாய்ப்புக்கள் அமைந்தன. அதன் பிறகு ஒரு கட்டத்தில் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகி விட்டார். அதே போல் சில சர்ச்சைகளால் சினிமா பக்கம் மீண்டும் தலைகாட்டாமல் இருந்து வந்தார். தற்போது  மீண்டும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”  மூலம் ரீஎண்டரி கொடுத்துள்ளார். 

வடிவேலு

அவர் தமிழ் சினிமாவில் எத்தனை உயரங்களுக்கு சென்றாலும் அவரது குடும்பம் மதுரையிலேயே வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வடிவேலுவின் தாயார் வயது மூப்பு  காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர் திடீரென நேற்று  இரவு காலமானார்.வடிவேலு வீட்டில் மூத்தவரின் உயிரிழப்பு குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web