காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிப்பு! இது வரை வகித்து வந்த பதவிகள் விபரம்!

 
ஈவிகேஎஸ்

விறுவிறுவென சூடு பிடிக்க துவங்கியுள்ளத் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல். சிங்கம் படுத்தா எலி கூட வந்து எட்டி நின்று ஆறுதல் சொல்லும் என்பார்கள் இல்லையா? அப்படி இருக்கிறது அதிமுகவின் நிலை. ஒரு காலத்தில்.. அதென்ன ஒரு காலத்தில்.. கட்சி துவங்கியதில் இருந்தே ஜெயலலிதா மறைவு வரையில், கூட்டணிக்காக மற்ற கட்சித் தலைவர்களும், லெட்டர் பேட் தலைவர்களும் அதிமுகவின் பவ்யமாய் சென்று ஆதரவு தெரிவித்து வருவார்கள். இன்றைய நிலையோ, ஈபிஎஸ்ஸூம், ஓ.பி.எஸ்ஸூம் கட்சியைக் காலில் போட்டு மிதிக்காத குறை தான்.

என்னுடைய ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை.. கட்சியே கதிகலங்கி சுக்கு நூறாய் உடைந்தாலும் நான் ஜெயிக்கணும் என்கிற மனோபாவம் இருவருக்கும் இருப்பதாகவே தொண்டர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. 46 வயதான இவர், கடந்த ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருமகன் ஈவெரா மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இதனைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதுவரையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வகித்து வந்த பதவிகள் விபரம் :

1984 ம் ஆண்டு முதல் 1987 ஆண்டு வரை: தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்

1996 முதல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்

1998 ம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்

2000 ம் ஆண்டு முதல் 2002 ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

2002 ம் ஆண்டு முதல் 2003 ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்

2004 ம் ஆண்டு 14வது மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

23 மே - 24 மே 2004 மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் இணை அமைச்சர்

2004 ம் ஆண்டு முதல் 2005 வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் துறையின் இணை அமைச்சர்

2005 ம் ஆண்டு முதல் 2009 வரை மத்திய ஜவுளித் துறையின் இணை அமைச்சர்

2015 ம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

Thirumagan

இதையடுத்து தற்போது, இந்திய தேர்தல் ஆணையமும் இந்த தொகுதியை காலி என்று அறிவித்துள்ளது. தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். பொதுவாக இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 31-ம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழ்நாடு அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.

AICC

இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி மேலிடத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். நான் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web