வேடசந்தூர் அருகே கோர விபத்து… ஆட்டோ ஓட்டுநர் உடல் நசுங்கி பலி…

 
விபத்து

 

திண்டுக்கல் அருகே ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வந்த தனியார் நூற்பாலை பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.  திண்டுக்கல் மாவட்டம் வேட்சந்தூர் அடுத்த பூத்தாம்பட்டி பகுதியில் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு தனியார் நூற்பாலை பேருந்து சென்று கொண்டிருந்தது. எரியோட்டில் இருந்து வேடசந்தூருக்கு  எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ் என்பவர் ஆட்டோவை ஓட்டி வந்தார்.

விபத்து

இந்த நிலையில் பூத்தாம்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு வந்த போது நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றி வந்த பேருந்து ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில்   ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருடன் ஆட்டோவில் வந்த அவரது நண்பர் சந்தோஷ்  பலத்த காயம் அடைந்தார். விபத்து தொடர்பாக தகவல் அறிந்த வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு வந்தார். மேலும் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றிய போலிசார் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து

இந்த கோர விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.    இதனிடையே ஆட்டோவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பதபதைக்க வைத்துள்ளது   

From around the web