ஜாலி!! நாளை விடுமுறை கிடையாது!! 150 சிறப்பு பேருந்துகள், 20 கூடுதல் கவுண்டர்கள்!!

 
இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படாது!

நாளை காணும் பொங்கலை ஒட்டி  பீச், பார்க், மால்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர்

இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சூழ்நிலையை பொறுத்து மேலும் சில மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும் அவைஉடனுக்குடன் கூகுள் மேப்பில் அப்டேட் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர்
அந்த வகையில் சென்னையின் புறநகர் பகுதியில் செயல்பட்டு வரும்  வண்டலூர் உயிரியல் பூங்கா ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் பராமரிப்பு பணிக்காக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். நாளை காணும் பொங்கலை ஒட்டி அதிக மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் நாளை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பார்வையாளர்களின் வசதிக்காக 20 கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படும் எனவும், சென்னையின் முக்கியபகுதிகளில் இருந்து வண்டலூர் வந்து செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web