பானி பூரி கடையில் ரூ.20 கடனுக்காக கத்திகுத்து !

 
குப்தா

இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் நிதானத்தை இழக்கின்றனர். இதன் விளைவு மிகப்பெரிதாக அமைந்துவிடுகிறது. அப்படியோரு நிகழ்வு தான் ஒருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்  நிலைக்கு சென்றுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் ஜெய்ராம் குப்தா என்பவர் சாலையோரம் பானி பூரி கடை வைத்துள்ளார். இவர் கடை போட்டிருக்கும் பகுதிக்கு அருகே வேறொரு கடையில் வேலை பார்க்கும் ஒருவர், குப்தாவிடம் பானி பூரி சாப்பிட்டுவிட்டு கடன் சொல்லியுள்ளார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடன் பாக்கி வைத்திருக்கும் நபரிடம் 20 ரூபாய் பாக்கியைத் தருமாறு கேட்டிருக்கிறார் குப்தா. அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

குப்தா

சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியதில் திடீரென மோதல் ஏற்பட்டது. பின்னர் சிறிதும் எதிர்பார்க்காத நேரத்தில், அந்த நபர் ஜெய்ராம் குப்தாவை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கத்தியால் குத்தியவரை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
 

From around the web