இன்று முதல் ஜனவரி 17 வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

 
டாஸ்மாக் விடுமுறை

இன்று முதல் ஜனவரி 17ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த பகுதிகளில் இன்று முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெற உள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் ரூ.1000மும், டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டிலுமாக தைப் பொங்கல் விழாவை தமிழகம் முழுவதுமே குடிமகன்கள் கொண்டாடி வருகின்றனர். எந்த கழகம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் நிலை இப்படி இருளிலே தான் சிக்கி தவிக்கும் போல.. சரி.. விஷயத்துக்கு வருவோம்.. தமிழகத்தில் மதுபானக்கடைகள் அரசின் கட்டுப்பாட்டில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் நண்பகல் 12 மணி தொடங்கி இரவு 10 வரை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும். வருடத்தில் 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும். அதே போல் உள்ளூர் விழாக்கள், பண்டிகைகள் காரணமாகவும் அவ்வப்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடுவதுண்டு. 

குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

இந்த தினத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள், விடுதிகள் அனைத்தும் செயல்படாது. மீறி செயல்படுபவர்கள், கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கலுக்கு 3 தினங்களே உள்ள நிலையில் இந்த மாதத்தில் மீதம் உள்ள 15 நாட்களில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாஸ்மாக்

அதன்படி இன்று ஜனவரி 15 ம் தேதி திருவள்ளுவர் தினம்  ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் , ஜனவரி 30 தேதி வள்ளலார் நினைவு தினம் இந்த  3 நாட்களிலும்   டாஸ்மாக் கடை தமிழகத்தில் இயங்காது.தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருக்கும் ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அப்பகுதிகளில் செயல்பட்டு வரும்  டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web