தொடரும் கொடூரம்!! மகளை கொலை செய்து சூட்கேசில் அடைத்து சாலையில் வீசிய தந்தை!!

 
ஆயுஷி

லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்த ஷ்ரத்தாவை அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக நாய்களுக்கு வீசி விட்டான் என்ற பயங்கரம் குறையும் முன் உத்தரப்பிரதேசத்தில் அதே போல் 6 துண்டுகளாக காதலியை வெட்டி கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது. இதே போல் மற்றும் ஒரு பயங்கரம் நிகழ்ந்துள்ளது. பெற்றோர் பேச்சை கேளாமல் வேற்றுச்சாதியினத்தவரை திருமணம் செய்த மகளை பெற்ற தந்தையே கொலை செய்தது பெரும் அதிர்ச்சியையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுஷி


தலைநகர் டெல்லியில் யமுனா விரைவுச்சாலையில்  மதுரா அருகே ஒரு பெரிய சூட்கேசில் இளம்பெண்ணின் உடல் பாலிதீன் கவரில் கட்டப்பட்டு வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இவரை அடையாளம் காண போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.  அதன்படி டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சமீபத்தில் காணாமல் போன பெண்களின் பட்டியல் திரட்டப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பெண், தெற்கு டெல்லி பாதார்பூர் பகுதியில் வசித்து வரும்  நிதேஷ் யாதவ்-பிரஜ்பாலா தம்பதியின் 22 வயது மகள் ஆயுஷி யாதவ் எனக் கண்டறியப்பட்டது. அவரது உடலை அடையாளம் காட்ட அவரது தந்தை முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.  விசாரணையை தீவிரப்படுத்திய போது பெற்ற மகளை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.  

ஆயுஷி, பி.சி.ஏ. 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியே சென்று தங்கிய அவர் வீடு திரும்பிய போது தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டதாக வீட்டில் கூறினார். அவர் வேற்று சாதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆத்திரம் தலைக்கேறிய நிதேஷ், மகளை சராமாரியாக அடித்து துவைத்தார். ஆத்திரம் தீராததால் தன்னிடம் உள்ள  கைத்துப்பாக்கியால் அவரை இருமுறை சுட்டுக் கொலை செய்தார்.  ரத்த வெள்ளத்தில் பெற்றோர் கண்முன்னே துடிதுடித்து ஆயுஷி உயிரிழந்தார்.

போலீஸ்

அதன் பிறகு  மகளின் உடலை ஒரு பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றி பெரிய சூட்கேசுக்குள் அடைத்து காரில் எடுத்துச் சென்று யமுனா விரைவுச்சாலை ஓரத்தில் வீசி எறிந்து விட்டார். ஆயுஷின் தாயும் இதற்கு உடந்தையாக இருந்தது தான் வேதனையின் உச்சம். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் பெற்றோர் இருவரையும் கைது செய்துள்ளனர். மகள் வேற்று சாதி ஆணை திருமணம் செய்ததை ஏற்கமுடியாத பெற்றோர் மகளை சுட்டு கொலை செய்து சாலையோரம் வீசி எறிந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web