போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை காட்டிக்கொடுக்கும் கேமரா… ஆப்பு வைத்த காவல்துறை…

 
கண்காணிப்பு கேமரா

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஒரு வழிப்பாதையில் பயணம் செய்பவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக விதிக்கப்பட்டு வந்த அபராத தொகை பல மடங்கு உயர்த்தி தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.100 ஆக இருந்த அபராத தொகை தற்போது ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது.  விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் கூடுதல் அபராதம் விதிக்கும் இந்த நடைமுறை கடந்த மாதம் 26-ந்தேதி அமலுக்கு வந்தது.  

கண்காணிப்பு கேமரா

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் போலீசார்   அபராதம் வசூலித்து வருகிறார்கள். அதேநேரத்தில் கேமராக்கள் மூலமும் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தானியங்கி கேமராக்களே விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கம்ப்யூட்டர் மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறை ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் அண்ணாநகர் பகுதியில் சுமார் 60 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா

வேப்பேரி போக்குவரத்து போலீஸ் எல்லைக்குட்பட்ட புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் அருகில் உள்ள வெல்கம் ஓட்டல் சந்திப்பிலும் இந்த வகை கேமரா அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதிகளில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராத தொகை ஆன்லைன் மூலமே விதிக்கப்பட்டு வருகிறது. அண்ணாநகர் போலீஸ் நிலைய சந்திப்பு, ரவுண்டானா, சாந்தி காலனி சந்திப்பு, திருமங்கலம், முகப்பேர் ரோடு சந்திப்பு, 100 அடி ரோடு மற்றும் 18-வது மெயின் ரோடு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு இந்த ஆன்லைன் அபராதம் அதிக அளவில் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அண்ணாநகர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சற்று உஷாராகவே செல்கின்றனர்.

From around the web