மாத வாடகை ரூ.200 தான்! தமிழகம் முழுவதும் பெண்கள் தங்குவதற்கான விடுதிகள்! 1067 அறைகள் காலி!

 
பெண்கள் விடுதி

இன்னும் 1067 அறைகள் காலியாக உள்ளன என்கிற செய்தியே அதிர்ச்சியாக தான் இருக்கிறது. அப்போ.. இந்த திட்டங்களைப் பற்றியும், வசதிகளைப் பற்றியும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமலேயே இருக்கிறார்களா? இல்லை.. தங்கும் விடுதி அறைகள் அப்படி மோசமாக இருக்கிறதா என்கிற கேள்விகளும் எழுகின்றன.

எல்லா பிரச்சனைகளுக்கும் அரசை மட்டுமே குறைச் சொல்ல முடியாது. அதிகாரிகளின் கைகளில் தான் திட்டங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. நிறைய இடங்களில் விடுதிகளின் தரம் நன்றாகவே பராமரிக்கப்படுகின்றன. பாதுகாப்பாகவும் தங்கி, பணிபுரியும் இடங்களுக்குச் செல்லலாம். வாங்குகிற சம்பளத்தில் பாதியை தங்கும் இடத்திற்கு செலவு செய்ய வேண்டியதில்லை. மாத வாடகை ரூ.200 ரூபாய் தான். பெண்களை வேலைக்கு செல்ல ஊக்குவிக்கவும்,  பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய/மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களில் செயல்படுத்தி வருகிறது. அதில், பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் திட்டம் மிக முக்கியமானதாக உள்ளது. நம்பகமான மற்றும் வசதியான தங்குமிடங்கள் கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு 28 அரசு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சரி.. இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்..

பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் திட்டம் (scheme for working women hostel): 

கடந்த 1975ம் ஆண்டு முதல் , மத்திய/மாநில அரசு நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. குடும்பத்தை விட்டு வெளியூரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அமைத்துக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

hostel

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்: மாத வருமானம் சென்னையில், ரூ.25,000/-த்திற்குள்ளும், இதர மாவட்டங்களில் ரூ.15,000/-த்திற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

தங்கி பயன்பெறும் கால அளவு: மூன்றாண்டுகள் விடுதியில் தங்கலாம். மூன்றாண்டுகளுக்கு மேல், பயனாளியின் தேவை , தங்கிப் பயிலும் காலத்தில் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் காப்பாளரின் பரிந்துரையின்பேரில் நீட்டிக்கப்படும்.

மாத வாடகை: சென்னையில் மாதமொன்றுக்கு  வாடகையாக ரூ.300/ செலுத்த வேண்டும்.  இதர மாவட்டங்களில் ரூ.200/-ம் செலுத்த வேண்டும். உணவு மற்றும் மின் கட்டணம் பகிர்ந்து  கொள்ள வேண்டும். 

hostel

எங்கெல்லாம் விடுதி உள்ளது: சென்னையில் 7 அரசு விடுதிகளும், காஞ்சிபுரத்தில் 3 அரசு விடுதிகளும்,  திருச்சியில் 2 விடுதிகளும்  உள்ளன. கோவை, சிவகங்கை, தூத்துக்குடி, கடலூர், தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு விடுதிகள் உள்ளன.

சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 1415 பேர் தங்குவதற்கு  வசதி  செய்யப்பட்டுள்ளது. ஆனால், 348 அறைகளில் பெண்கள் தங்கியுள்ளனர். 1067 அறைகள் காலியாக உள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web