இன்று தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்! விடுமுறை கிடையாது!

 
மாணவிகள் அரசு பள்ளி

தமிழகத்தில் அக்டோபர் 29 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பின. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.. குறிப்பாக மயிலாடுதுறையில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அப்பகுதியில்  குடியிருப்பு வீடுகள் நீரில் மூழ்கின அரசின் நிவாரண முகாம்கள் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

 அங்கு நிலைமை சீராகும் வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.  நவம்பர் 2 வது வாரத்தில் தொடர்கனமழை காரணமாக  29 மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இதனை ஈடுகட்டும் வகையில் டிசம்பர் 3ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள்

அதன்படி இன்று  டிசம்பர் 3ம் தேதி சனிக்கிழமை சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு முழு வேலை நாள் என சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாணவர்கள்

இந்த நாளில் திங்கட்கிழமை பாட வேளையின் படி முழு பணி நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை டிசம்பர் 3ம் தேதி  சனிக்கிழமை  வகுப்புகள் கிடையாது . இவர்களுக்கு வழக்கமான வாரவிடுமுறை தினமாக கொள்ளப்படும்.  6  முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web