இந்தியாவிலேயே இதுதான் அதிகம்.. ரூ.20 கோடி மதிப்புடைய நாய்- தினமும் வெறும் ரூ.2,000 செலவு !

 
sa

நாய் என்றால் பலருக்கு பயம்.. ஆனால் சிலருக்கு காதல். தங்கள் வீட்டில் செல்லப்பிரணியான நாய் வளர்ப்பதை மிகவும் நேசிப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதிக விலை கொடுத்து உயர்ரக நாய்களை வாங்கி, தினமும் அதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து உணவு வழங்குபவர்களும் உள்ளனர்.

அந்த வகையில் இந்திய அளவில் ஒருவர் கவனம் ஈர்த்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், ரூ.20 கோடி மதிப்புள்ள காகேசியன் ஷெப்பர்டு நாய் பங்கேற்றது. பெங்களூருவைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்குச் சொந்தமான இந்த வகை நாயின் வயது 14 மாதங்கள் தான்.

dog

மிகவும் அரிதான இனத்தைச் சேர்ந்தது காகேசியன் ஷெப்பர்டு நாய். இதில் வியக்கவைக்கும் தகவல் என்னவென்றால், இந்த வகை நாய்க்கு ரூ.20 கோடி விலை கொடுக்கவும் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தயாராக இருந்தார். 

தற்போதைய சூழ்நிலையில் நாட்டிலேயே மிக விலை மதிப்புடைய நாய் இதுதான் என்ற சிறப்பையும் பெற்றது. இந்த நாயின் பராமரிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2,000 செலவாகிறது. பெங்களூருவிலிருந்து பல்லாரிக்கு மிகவும் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட குளிர்சாதனம் பொருத்தப்பட்ட காரில் கொண்டு வரப்பட்டுள்ளது. 

dog

என்னிடம் இரண்டு காகேசியன் ஷெப்பர்டு வகை குட்டிகள் உள்ளன. அவற்றை தலா 5 கோடிக்கு வாங்க பலரும் தயாராக இருக்கிறார்கள் என்று காகேசியன் ஷெப்பர்டு நாய் உரிமையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
 
 

From around the web