அடுத்த மாசம் கல்யாணம்.. தாயின் கள்ளக்காதலன், நகைக்காக 18 வயசு மகளைக் கொன்ற துயரம்!

 
கொலை போலீசார்

அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தாயின் கள்ளக்காதலன், வீட்டில் தனியே தங்கி இருந்த 18 வயது மகளை, நகைக்காக கழுத்தை நெரித்து கொலைச் செய்த சம்பவம் சென்னை பூந்தமல்லியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பூந்தமல்லி சென்னீர் குப்பம், மேட்டு தெருவில் வசித்து வருபவர் அம்சவல்லி (36). அம்சவல்லியின் மகள் சங்கீதா (18).  கணவரை பிரிந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார் அம்சவல்லி. மகள் சங்கீதா, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார் அம்சவல்லி. சங்கீதாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக தனது தாய் அம்சவல்லியுடன் வந்து தங்கி இருந்தார் சங்கீதா.

Murder

இந்நிலையில் வழக்கம் போல நேற்று காலை அம்சவல்லி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சங்கீதா மட்டும் தனியாக இருந்தார். அம்சவல்லி நேற்று இரவு, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது, தனது மகள் சங்கீதா கழுத்து நெரிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் கொலுசும் மாயமாகி இருந்தது. 

இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார், சங்கீதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

Poonamallee

விசாரணையில், அம்சவல்லிக்கு, ராஜு (38) என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அம்சவல்லி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டுக்கு வந்த ராஜு, சங்கீதாவை கொன்று விட்டு கம்மல், கொலுசு ஆகியவற்றை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து அம்சவல்லியிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கள்ளக்காதலன் ராஜுவை தேடி வருகிறார்கள். அவர் கைதானால் தான் சங்கீதா கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web