குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!!

 
டிஎன்பிஎஸ்சி


தமிழக அரசின் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதி அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன் படி நடப்பாண்டில்  குரூப் 4  நிலையில் காலியாக உள்ள 7301 பணிகளுக்கான அறிவிப்பை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையயம் மார்ச் 30ம் தேதி வெளியிட்டது. இந்த குரூப் 4 தேர்வுக்கு சுமார் 16.2 லட்சம் பேர் விண்ணப்பம் தெரிவித்திருந்தனர். 

டிஎன்பிஎஸ்சி
இதற்காக செப்டம்பரில் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் 7301 பணியிடங்களுக்கு 14 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த பணியிடங்களை பொறுத்தவரை மகளிருக்கே அதிக இடங்கள் நிரப்பப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதன் மீது நடத்தப்பட்ட விசாரணையில் வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த புதிய முறையைப் பின்பற்றி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.


இந்நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி  வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்தில் குரூப் 4 மற்றும் 3 எழுத்துத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்வாணையம்  பிரிவு அடிப்படையில் தற்காலிக தகுதிப் பட்டியல் வெளியிடப்படும். 

டிஎன்பிஎஸ்சி
2018-2019ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 4499வது இடத்திற்குள் வந்த தேர்வர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்  4130வது வரை இடத்திற்குள்ளும், பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் 6366வது இடத்திற்குள்ளும், பழங்குடியினர் 15320  இடத்திற்குள்ளும்  சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இவர்களின்  சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு  தகுதியானவர்களின்  தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதனடிப்படையில், தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web