அதிர்ச்சியில் உலக நாடுகள்.. சிக்குகிறார் அமெரிக்க அதிபர் !!

 
biden

உலகளவில் அதிக அதிகாரம் கொண்ட நாடாக அமெரிக்காவும், நபராக அமெரிக்க அதிபரும் கருதப்படுகின்றனர். அமெரிக்கா நினைத்தால் எதையும் செய்யமுடியும் என்ற வல்லமை பெற்றுள்ளது. அதேநேரம் அதிபரே தவறு செய்தாலும் கண்டிப்புடன் நடவடிக்கை எடுக்க அங்கு சட்டம் உள்ளது.
அந்த வகையில் தற்போது சிக்கியுள்ளார் அதிபர் பைடன். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

biden

ஜோ பைடன் துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை தனது வீட்டில் பதுக்கி வைத்ததாக இவர்  மீது குற்றம் சாட்டப்பட்டது. அதாவது, அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் என்றும், ஒபாமா நிர்வாகத்தின் உக்ரைன், சீனாவில் உளவுத்துறை சேகரிக்கும் தகவல்கள் மற்றும் ஈரானின் ஏவுகணைத் திட்டம் பற்றிய முக்கியத் தகவல்களை உள்ளடக்கியதாகக் கூறப்பட்டது.

biden

அதனைத் தொடர்ந்து தற்போது எடுத்த நடவடிக்கையில் அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். பைடன் வீட்டில் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


 

From around the web