யோகாவில் உலக சாதனை.. நெல்லை மாணவிக்கு குவியும் பாராட்டு !

 
yoga

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பள்ளி மாணவி பிரிஷா. பாளையங்கோட்டை மீனா சங்கர் வித்யாலயாவில் 8ஆம் வகுப்பு பயிலும் இவர் யோகாவில் 70 உலக சாதனைகள் நிகழ்த்தியவர் என்ற பெருமைக்குறியவர். மிகச் சிறிய வயதிலேயே மூன்று டாக்டர் பட்டங்களை பெற்றவர். இவருக்கு அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை சார்பாக பாராட்டு விழா நெல்லையில் நடைபெற்றது.

யோகாவில் 70 உலக சாதனைகள் படைத்துள்ள மாணவி பிரிஷாவை பாராட்டி நியூ ஜெருசலேம் பல்கலைக்கழகம், அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம், இந்தியன் எம்பயர் பல்கலைக்கழகம், ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளன. இளம் வயதிலேயே யோகா ஆசிரியருக்கான மத்திய அரசு சான்றிதழை பெற்றுள்ளார்.

yoga

திருநெல்வேலியில் உள்ள பார்வையற்றோர் பள்ளி,முதியோர் இல்லம், காவல்துறையினர், என்சிசி மாணவர்கள், எய்ட்ஸ் ஹோம் என பல்வேறு தரப்பினருக்கு இலவச யோகா பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். யோகா ராணி, லிட்டில் யோகா ஸ்டார், யோக ரத்னா யோகா கலா ஸ்ரீ போன்ற பல்வேறு பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

கண்ணைக் கட்டிக் கொண்டு எதிரில் இருப்பவற்றை துல்லியமாக சொல்வது இவரது தனித்திறமை. கண்ணைக் கட்டிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டி அதிலும் உலக சாதனை படைத்துள்ளார். யோகா இன்றே செய்வோம்- இன்பம் பெறுவோம் என்ற நூலை எழுதியுள்ளார்.

yoga

இவரது சாதனைகளை போற்றும் வகையில், நெல்லை அறிவுச்சுடர் அரியமுத்து அறக்கட்டளை நிறுவன தலைவர் கல்வியாளர் முனைவர். குணசேகர் அரிய முத்து அவருக்கு பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்தார். நிகழ்வில் மாணவி பிரிஷா பொன்னாடை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். மேலும் அவரை பாராட்டும் விதமாக கேடயம், மரக்கன்றுகள், புத்தகங்கள் வழங்கப்பட்டது.

 

From around the web