ஒரே டிக்கெட்ல பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் பயணிக்கலாம்! முதல்வர் ஆலோசனை!

 
பேருந்து ரயில், மெட்ரோ

தமிழகத்தில் பொதுமக்கள் கூடிய விரைவில் ஒரே டிக்கெட்டில் பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் நேற்று  காலை 11 மணிக்கு சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெற்றது. 

பயணச்சீட்டு

இக்கூட்டத்தில், மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் , பலவகையான போக்குவரத்துகளை  ஒருங்கிணைக்கும் வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஸ்டாலின்

இத்திட்டத்தின் படி  ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்துகள் , சென்னை மெட்ரோ ரயில் , புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web