அதிர்ச்சி... ஹோம் வொர்க் ஏன் செய்யல? கண்டித்த அப்பாவை போலீசில் பிடிச்சி கொடுத்த 10 வயது சிறுவன்!

சீனாவில் வசித்து வரும் 10 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த சிறுவன் பள்ளியில் தனக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை தினமும் தவறாமல் செய்து விடுவார். ஆனால் இச்சம்பவம் நடைபெற்ற நாளில் சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனை பார்த்த தந்தை மகனை கடுமையாக திட்டினார்.
இதனால் கோபமடைந்த சிறுவன் அருகில் இருக்கும் கடைக்கு சென்று தொலைபேசி மூலம் போலீசை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளான்.
தன் தந்தை வீட்டில் அபின் என்ற போதை பொருள் வைத்திருப்பதாக தகவல் தெரிவித்துவிட்டு எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு வந்து விட்டார். அந்த தகவலின் படி உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சோதனை நடத்தி போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
சிறுவனின் தந்தை மருத்துவ நோக்கங்களுக்காக அதை வைத்திருப்பதாக தெரிவிதுள்ளார். ஆனாலும் போலீசார் அந்த காரணத்தை கேட்காமல் சிறுவனின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!