10 வயது சிறுவனுக்கு பலமுறை பாலியல் தொல்லை.. எல்லைமீறிய பள்ளி ஆசிரியை.. அதிர்ச்சி பின்னணி!

மகாராஷ்டிரா மாநிலம் தானேயைச் சேர்ந்த 10 வயது சிறுவன் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியை ஒருவர் சிறுவனை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால், அவனது தாய் மற்றும் தந்தையைக் கொன்றுவிடுவேன் என்று ஆசிரியை சிறுவனை மிரட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில், மனமுடைந்த சிறுவன் தைரியத்தை வரவழைத்து, தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி பெற்றோரிடம் கூறினான். இதனால் அதிர்ச்சியடைந்த தானேயில் வசிக்கும் பெற்றோர் அங்குள்ள காவல்துறையை அணுகி புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!