பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான 16 வயது சிறுமி.. 26 வார கருவை கலைக்க உத்தரவிட்டது நீதிமன்றம்!
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமானார். சிறுமியின் உடல்நிலை மற்றும் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்குமாறு சிறுமியின் பெற்றோர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஒருநபர் பெஞ்ச் விசாரித்து கருக்கலைப்புக்கு தடை விதித்தது.
இது தொடர்பான மேல்முறையீட்டு மனு, கேரள உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ஒருநபர் அமர்வின் உத்தரவை ரத்து செய்து, சிறுமியின் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்தனர். கருத்தரித்து 26 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், சிறுமியின் மனநிலை குறித்த நிபுணர்களின் அறிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சிறுமிக்கு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும், கற்பழிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் கருவின் ரத்த மாதிரிகளை சேகரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருவில் உள்ள குழந்தையை உயிருடன் வெளியே எடுக்க முடிந்தால், அதனை பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறுமி அல்லது அவரது குடும்பத்தினர் பராமரிக்கத் தயாராக இல்லை என்றால், அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த மாதிரிகளை தடய அறிவியல் ஆய்வகத்தில் பாதுகாப்பாக வைக்க விசாரணை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!