திருமண ஆசை காட்டி 17வயது சிறுமியிடம் உல்லாசம்.. 22 வயது இளைஞர் போக்சோவில் அதிரடியாக கைது!

 
பாலியல்

தஞ்சாவூர் மாவட்டம் பூமால் ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் சத்தியசீலன் (வயது 22). தஞ்சாவூரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வீட்டுக்கு வீடு டெலிவரி செய்யும் பணியாளராக வேலை செய்கிறார். இவரும் 17 வயது சிறுமியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில், சத்தியசீலன் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தார்.

மாணவி பாலியல் வழக்கு!! ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது  குண்டர் சட்டம்!!

அதை புகைப்படம் எடுத்து தொடர்ந்து சிறுமியை மிரட்டி தவறாக நடந்து கொண்டார். சத்தியசீலனின் மிரட்டல்களைத் தாங்க முடியாமல், சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், சத்தியசீலன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை போலீசார் கண்டறிந்தனர்.

கைது

இதையடுத்து, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சத்தியசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web