20 ஆண்டுகால டென்னிஸ் பயணத்துக்கு முற்றுப்புள்ளி ... ஓய்வை அறிவித்தார் ரோஹன் போபண்ணா!
இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரரான ரோஹன் போபண்ணா, அனைத்துவிதமான தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளார். இதன்மூலம், கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற நான்கு இந்திய டென்னிஸ் வீரர்களில் இருமுறை கிராண்ட்ஸ்லாம் வென்றவர் என்ற பெருமை பெற்ற போபண்ணா, தனது 20 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
❤️❤️❤️ pic.twitter.com/IS3scPrwhW
— Rohan Bopanna (@rohanbopanna) November 1, 2025
45 வயதான போபண்ணா கடைசியாக பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் கஜகிஸ்தானின் அலெக்ஸாண்டருடன் இணைந்து விளையாடினார். ஆனால் தொடக்கச் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார். 2023-ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பையில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு சர்வதேச டென்னிஸிலிருந்தும் விலகியிருந்தார். தற்போது அனைத்து தொழில்முறை போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து, தனது விளையாட்டு வாழ்க்கைக்கு நிறைவு கூறியுள்ளார்.
தனது சமூக வலைதளப் பதிவில் அவர், “விடைபெறுகிறேன்... ஆனால் இது முடிவு அல்ல. டென்னிஸ் எனக்கு வெறும் விளையாட்டாக இல்லை; அது எனக்கு வலிமையையும் நம்பிக்கையையும் தந்தது. எனது பயிற்சியாளர்கள், அணியினர், ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார். ஏடிபி 1000 மற்றும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மிக வயதான வீரர் என்ற சாதனையையும் பெற்ற போபண்ணா, 2016 ரியோ ஒலிம்பிக்கில் நான்காம் இடத்தைப் பெற்று பதக்கத்தை மயிரிழையில் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
