வீடியோ பார்த்து 9 வயது சிறுவன் செய்த கொடூர செயல்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி

 
சிறுமி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கோந்த்வா பகுதியில் 9 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவன் அருகில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான். இவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் குடும்பத்திற்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த 3 வயது சிறுமி 9 வயது சிறுவனை அண்ணா என்று அழைத்து பாசமாக பழகினாள்.

சிறுமி

இந்நிலையில் சம்பவத்தன்று 3 வயது சிறுமி சிறுவனுடன் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள். இதையடுத்து அந்த சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.தனக்கு என்ன நடக்கிறது என்று கூட அறியாத சிறுமி, தன் வீட்டிற்குச் சென்ற பிறகு தனக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும் தன் தாயிடம் கூறினாள். அதிர்ச்சியடைந்த தாய், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து சிறுமி விசாரணைக்காக குழந்தைகள் உரிமைக்காகப் பணியாற்றும் தனியார் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

போலீஸ்

அப்போது, ​​சிறுவன் செய்ததை சிறுமி தெளிவாக விளக்கினார். இதையடுத்து சிறுவனை சிறார் நீதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, ​​சமூக வலைதளத்தில் இதுபோன்ற செயலை பார்த்ததாக அதிர்ச்சி தகவலை அந்த சிறுவன் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அந்த சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web